/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் நடமாடும் கருஞ்சிறுத்தை அச்சத்தில் உள்ளூர் மக்கள்
/
குன்னுாரில் நடமாடும் கருஞ்சிறுத்தை அச்சத்தில் உள்ளூர் மக்கள்
குன்னுாரில் நடமாடும் கருஞ்சிறுத்தை அச்சத்தில் உள்ளூர் மக்கள்
குன்னுாரில் நடமாடும் கருஞ்சிறுத்தை அச்சத்தில் உள்ளூர் மக்கள்
ADDED : ஜூன் 23, 2024 11:55 PM

குன்னுார்:குன்னுாரில் இரவுநேரங்களில் உலா வரும் கருஞ்சிறுத்தையால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கரடி சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பழைய அருவங்காடு, உபதலை, வள்ளுவர் நகர், வாசுகி நகர், பழத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் இருப்பதை இரவு நேரங்களில் பணி முடித்து செல்வோர் பலரும் பார்த்துள்ளனர். சில இடங்களில் கண்காணிப்பு கேமராவில் கருஞ்சிறுத்தை நடமாடும் காட்சி பதிவாகியுள்ளது.
வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில்,'பொதுவாக கருஞ்சிறுத்தை ஒரு இடத்தில் இருப்பதில்லை. நாய் முயல் உட்பட சிறு விலங்குகளை உணவாக உட்கொள்ளும்.
இதனால், அடிக்கடி இடம்பெயர்ந்து மீண்டும் அதே இடத்திற்கு வர தாமதமாகும். தற்போது குன்னூர் பகுதிகளில் இதன் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும்,' என்றனர்.