/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதில் சுணக்கம் 'டெண்டர்' குழப்பதால் உள்ளூர் மக்கள் அதிருப்தி
/
வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதில் சுணக்கம் 'டெண்டர்' குழப்பதால் உள்ளூர் மக்கள் அதிருப்தி
வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதில் சுணக்கம் 'டெண்டர்' குழப்பதால் உள்ளூர் மக்கள் அதிருப்தி
வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதில் சுணக்கம் 'டெண்டர்' குழப்பதால் உள்ளூர் மக்கள் அதிருப்தி
ADDED : ஆக 13, 2024 01:58 AM
பந்தலுார்;நெல்லியாளம் நகராட்சியில், வளர்ச்சிப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நெல்லியாளம் நகராட்சியில் மொத்தம், 21 வார்டுகள் உள்ளன. இதன் தலைவராக பழங்குடி இனத்தை சேர்ந்த சிவகாமி உள்ளார். இவரின் தலைமையிலான நிர்வாகம், மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் 'ஆமை' வேகத்தில் செயல்படுவதாக, மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும், பல கவுன்சிலர்கள், ஒப்பந்ததாரர்களாக மாறி ஒப்பந்த பணிகள் எடுத்து செய்வதில் ஆர்வம் காட்டி வருவதால், ஒப்பந்ததாரர்கள் மற்றும் கவுன்சிலர்கள் இடையே தொடர்ச்சியாக, 'பனிப்போர்' நடந்து வருகிறது. நகராட்சியில் மொத்தம், 72 பேர் பதிவு பெற்ற ஒப்பந்ததாரர்களாக உள்ள நிலையில், இவர்களுக்கு ஒப்பந்த பணிகள் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
நகராட்சி தலைவர் தலைமையிலான கவுன்சிலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் இடையே ஏற்பட்டுள்ள விரிசலால், பல்வேறு அடிப்படை வளர்ச்சி பணிகள் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த பிப்., மாதம், 55 பணிகளுக்கு, 5 கோடி ரூபாய் மதிப்பில், டெண்டர் விடப்பட்டு பணிகள் ஒதுக்கீடு செய்து வேலைக்கான உத்தரவு வழங்கும் நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டதால் நிறுத்தப்பட்டது.
இதனை தற்போது நிறைவேற்ற வலியுறுத்தி போது, 'அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டதாகவும், மறு டெண்டர் விடப்படும்,' என, நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால், அதிருப்தி அடைந்த ஒப்பந்ததாரர்கள் சிலர், மறு டெண்டர் வைப்பதற்கு நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.
உள்ளூர் மக்கள் கூறுகையில்,'ஏற்கனவே டெண்டர் விடப்பட்ட பணிகளை, மீண்டும் டெண்டர் விடுவதால், பொதுமக்களின் வளர்ச்சி பணிகளில் தாமதம் ஏற்படும். எனவே, நகராட்சி நிர்வாகம் தேக்கமடைந்த வளர்ச்சி பணிகளை விரைவில் மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.