/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கரிமராஹட்டியில் சிறுத்தை: அச்சத்தில் உள்ளூர் மக்கள்
/
கரிமராஹட்டியில் சிறுத்தை: அச்சத்தில் உள்ளூர் மக்கள்
கரிமராஹட்டியில் சிறுத்தை: அச்சத்தில் உள்ளூர் மக்கள்
கரிமராஹட்டியில் சிறுத்தை: அச்சத்தில் உள்ளூர் மக்கள்
ADDED : ஆக 27, 2024 08:19 PM
குன்னுார்:குன்னுார் கரிமராஹட்டி கிராமத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
குன்னுார் அருகே உள்ள கரிமொரா ஹட்டி கிராமத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பகல் நேரத்தில் வந்த சிறுத்தை, அங்குள்ள நாய்களை வேட்டையாடி சென்றது. ஆடு மாடுகளை தாக்க மீண்டும் முயற்சி செய்ததால், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்புவதை தவிர்க்க வனத்துறையினர் அறிவுறுத்தினர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, 10:00 இப்பகுதிக்கு மீண்டும் நாய்கள் மற்றும் கால்நடைகளை வேட்டையாட வந்த சிறுத்தை திரும்பி சென்றது. இரவில் சப்தம் கேட்டு வெளியே வந்த சிலர் 'வீடியோ' எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
மக்கள் கூறுகையில்,'இங்கு ஏற்கனவே கரடிகளின் நடமாட்டம் அதிகரித்த நிலையில் மீண்டும் சிறுத்தையின் நடமாட்டமும் இருப்பதால் இரவில் வெளியே நடமாட அச்சம் ஏற்பட்டுள்ளது. வனத்துறையின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.