/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குறைந்த மின் அழுத்த பிரச்னை பொன்னானி சுற்றுப்புற மக்கள் பாதிப்பு
/
குறைந்த மின் அழுத்த பிரச்னை பொன்னானி சுற்றுப்புற மக்கள் பாதிப்பு
குறைந்த மின் அழுத்த பிரச்னை பொன்னானி சுற்றுப்புற மக்கள் பாதிப்பு
குறைந்த மின் அழுத்த பிரச்னை பொன்னானி சுற்றுப்புற மக்கள் பாதிப்பு
ADDED : மே 22, 2024 12:18 AM

பந்தலுார்;பந்தலுார் அருகே பொன்னானி, அம்பலபாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு உட்பட்டி மின் வாரிய அலுவலக கட்டுப்பாட்டில் இருந்து மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக அமைக்கப்பட்டுள்ள மின் டிரான்ஸ்பார்மர்கள் லோடு தாங்காமல் அடிக்கடி பழுதடைந்து வருகின்றன. மேலும் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் மின் நுகர்வோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.
இதனால், குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு, மின் சாதன பொருட்கள், தண்ணீர் இறைக்கும் மோட்டார் போன்றவை பயன்படுத்த முடியாத நிலையில், மின் சாதன பொருட்கள் அடிக்கடி பழுதடைந்து வருகிறது.
பொன்னானி பகுதியில் புதிய மின் டிரான்ஸ்பார்மர் அமைப்பதற்கு, தனியார் தோட்டத்திலிருந்து இடம் வாங்கி தரப்பட்டு, இரண்டு மாதங்கள் கடந்தும் இதுவரை, பணிகள் துவக்கப்படவில்லை. தற்போது, மழை காலம் துவங்கி உள்ள நிலையில், குறைந்த மின் அழுத்த பாதிப்பு அதிகரித்து மின் நுகர்வோர் மேலும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
எனவே, புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணியை உடனடியாக துவக்கி, சீரான மின்சாரம் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.

