தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மதுரை ஸ்பெஷல்

மதுரை ஸ்பெஷல்

மதுரை ஸ்பெஷல்


ADDED : ஏப் 21, 2024 01:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2024 01:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செய்முறை:

முதலில் அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தீயை குறைத்து அதில் சீரகம், சிறிய இஞ்சி துண்டு, பூண்டு, பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கி கொள்ளவும்.

பிறகு அதனுடன் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.

வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் சிறிதளவு புளி, புதினா, கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்றாக வதக்கவும். அனைத்தும் நன்றாக வதங்கியவுடன் அடுப்பை அணைத்து அவற்றை ஆறவிடவும்.

பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் அனைத்தையும் போட்டு அதனுடன் பொட்டுக்கடலை, தேவைக்கேற்ப கல் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக மசிய அரைத்து ஒரு பாத்திரத்தில் மாற்றி கொள்ளவும். பின்னர், கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கடலை

பருப்பு போட்டு கொள்ளவும். அனைத்தும் நன்றாக சிவந்தவுடன்

சிறிதளவு பெருங்காய பொடி போட்டு கலந்து அதனுடன் பொடியாக நறுக்கிய பாதி பெரிய வெங்காயம், இரண்டாக கிள்ளிய சிகப்பு காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விடவும். வெங்காயம் சிவந்தவுடன் கறிவேப்பிலை போட்டு கலந்து அடுப்பின் தீயை குறைத்து அதில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்தவுடன் அரைத்து வைத்துள்ள சட்னியை அதில் சேர்த்து குறைந்த தீயில் சட்னி சூடாகும் வரை விடாமல் கிளறி விட்டு இறக்கினால் சுவையான தண்ணீர் சட்னி ரெடி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us