/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
/
மாகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 03, 2024 09:55 PM
அன்னூர் : குருக்கம்பாளையம், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 10ம் தேதி நடைபெறுகிறது.
கணேசபுரம் அருகே உள்ள குருக்கம்பாளையத்தில் பழமையான மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் புதிதாக முன் மண்டபம், புதிய கோபுரம் அமைக்கப்பட்டு, சுற்றுப் பிரகார வேலைகள் செய்யப்பட்டு, வர்ணம் தீட்டப்பட்டு திருப்பணி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து கும்பாபிஷேக விழா, வரும், 8ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. அன்று நவகிரக ஹோமம், காப்பு கட்டுதல், முதற்கால வேள்வி பூஜை நடக்கிறது. வரும் 9ம் தேதி காலை இரண்டாம் கால வேள்வி பூஜையும், புதிய சுவாமி சிலைகளுக்கு அபிஷேக பூஜையும் நடக்கிறது. மதியம் விமான கலசம் பிரதிஷ்டை செய்தலும், மாலையில், 108 ஹோம திரவிய சமர்ப்பனமும் நடக்கிறது.
வரும் 10ம் தேதி காலை 6:30 மணிக்கு, விமான கோபுரத்திற்கும், இதையடுத்து, மூலஸ்தான மாகாளி அம்மனுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.
இரவு குழந்தைகளின் நடன நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை குருக்கம்பாளையம் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.