/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காடெ ஹெத்தையம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்
/
காடெ ஹெத்தையம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 02, 2024 01:50 AM
மஞ்சூர்;மஞ்சூர் அருகே கிழ்குந்தா கிராமத்தில் காடெ ஹெத்தையம்மன் கோவில் உள்ளது. குந்த சீமைக்கு உட்பட்ட கீழ்குந்தா, துானேரி, மட்டக்கண்டி, பாக்கோரை, மணிக்கல், மஞ்சூர் ஹட்டி, கரியமலை, கெரப்பாடு, முள்ளிகூர், முக்கிமலை, பிக்கட்டி, ஒசட்டி, எடக்காடு, காந்திகண்டி உள்ளிட்ட படுகரின கிராம மக்களுக்கு சேர்ந்த இக்கோவில் சமீபத்தில் புனரமைக்கப்பட்டு கோவில் கோபுரங்கள் வர்ணம் பூசப்பட்டு பொலிவுப்படுத்தப்பட்டது.
நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை ஒட்டி பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்றனர். காடெ ஹெத்தையம்மனுக்கு காணிக்கை செலுத்தி வழிப்பட்டனர்.
அனைவரும் பாரம்பரிய பாடல்களை பாடி நடனமாடினர். அன்னதானம் வழங்கப் பட்டது.