தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பராமரிப்பு இல்லாத கால்நடை மருத்துவமனை வளாகம்

பராமரிப்பு இல்லாத கால்நடை மருத்துவமனை வளாகம்

பராமரிப்பு இல்லாத கால்நடை மருத்துவமனை வளாகம்


ADDED : ஜூலை 10, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2026 07:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடலுார்: கூடலுாரில், பராமரிப்பின்றி காணப்படும் அரசு கால்நடை மருத்துவமனை வளாகத்தை சீரமைக்க வலியுறுத்தப்படுள்ளது.

கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஒட்டி, அரசு கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் வளர்ப்பு பிராணிகள் மற்றும் கால்நடைகளை அழைத்து வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இப்பகுதியில்,கால்நடைத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனை வளாகத்தை சுற்றி செடிகள் வளர்ந்து பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதன் நுழைவு வாயில் பகுதியின் இருபுறமும் செடிகள் வளர்த்து புதர்கள் போன்று காணப்படுகிறது. குறிப்பாக, சுவாச கோளாறை ஏற்படுத்தும் பார்த்தீனியம் செடிகளும் அதிகளவில் காணப்படுகிறது. நகரை ஒட்டி அமைந்துள்ள, கால்நடை மருத்துவமனை வளாகம் பராமரிப்பின்று காணப்படுவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மருத்துவமனை வளாகத்தில் வளர்ந்துள்ள புதர் செடிகளை அகற்றி சீரமைக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us