ADDED : மார் 11, 2025 06:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார் : பந்தலுார் அருகே தட்டாம்பாறை பகுதியில், சாலை ஓரங்களில் ஆபத்தான நிலையில் காணப்பட்ட மரங்கள், வருவாய் துறை அனுமதியுடன் வெட்டி, துண்டுகளாக்கி வைக்கப்பட்டு இருந்தன.
இதனை அருகில் உள்ள தேயிலை தொழிற்சாலைகளுக்கு, திருடி சென்று விற்பனை செய்வதாக பிதர்காடு வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. வனவர் சுதீர்குமார், வனக்காப்பாளர் சுரேந்திரன், வனக்காவலர் கோபி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
அப்போது, ஒரு 'பிக்-அப்' வாகனத்தில் சன்னக்கொல்லி பகுதியைச் சேர்ந்த, சுரேஷ்குமார்,30, என்பவர் மரத்துண்டுகளை, விற்பனை செய்வதற்காக திருடி செல்வது தெரிய வந்தது.
அவரை கைது செய்த வனத்துறையினர், வாகனம் மற்றும் மரத்துண்டுகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, வன அலுவலர் உத்தரவுப்படி, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.