/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாரியம்மன் திருவிழா கோலாகலம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
/
மாரியம்மன் திருவிழா கோலாகலம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
மாரியம்மன் திருவிழா கோலாகலம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
மாரியம்மன் திருவிழா கோலாகலம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
ADDED : மார் 04, 2025 11:20 PM

மஞ்சூர்; குந்தா துானேரி கிராமத்தில் மாரியம்மன் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மஞ்சூர் அருகே உள்ள குந்தா துானேரி கிராமத்தில் ஆண்டு தோறும் மாரியம்மன் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு திருவிழாவை ஒட்டி, கடந்த வெள்ளிகிழமை கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் காலை,6:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. தொடர்ந்து, 11:00 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட நாராயண மூர்த்தி கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
நேற்று காலை, 10:00 மணிக்கு ஊர் தலைவர் ராமன் தலைமையில் கிராம மக்கள் மேள தாளம் முழங்க அம்மனுக்கு ஆபரணங்கள் எடுத்து செல்லப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதில், திரளான கிராம மக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பஜனை நிகழ்ச்சி நடந்தது. அனைவரும் பாரம்பரிய உடையணிந்து நடனமாடி மகிழ்ந்தனர்.