/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: பக்தி பரவசம்
/
மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: பக்தி பரவசம்
ADDED : மே 12, 2024 11:51 PM

பந்தலுார்:பந்தலுார் அருகே பிதர்காடு பஞ்சோரா பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சக்தி முனீஸ்வரர் மற்றும் மாரியம்மன் ஆலய, 16 ஆம் ஆண்டு தேர் திருவிழா கடந்த, 10ம் தேதி ஊர் பொதுமக்கள் சார்பில் மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
தொடர்ந்து, தலைவர் சந்திரகுமார் தலைமையில் கொடியேற்றமும், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு எட்டு மணிக்கு அம்மன் குடிய அழைத்தல் இடம்பெற்றது. 11ம் தேதி காலை சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனையும், முக்கட்டி மாரியம்மன் கோவிலில் இருந்து ஆறு பேர் பங்கேற்ற பல்வேறு வகையான பறவை காவடி மற்றும் அக்னி சட்டி, பால்குடம், வேல் பூட்டி காவடி ஊர்வலம், 4 கிலோ மீட்டர் துாரம் நடந்தது. மாலையில் தேர் ஊர்வலம், ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று அதிகாலை, 4:00- மணிக்கு அக்னி காவடி, பூகுண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெற்றது.
ஊர்வலத்தில் பெண்கள் மற்றும் சிறு வயது இளைஞர்கள், பக்தியுடன் அலகு குத்தியும், 21 அடி நீளமுள்ள வேல் குத்தியும் பக்தியுடன் வந்தனர். ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.