/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாரியம்மன் கோவில் திருவிழா அம்மன் திருவீதி உலா
/
மாரியம்மன் கோவில் திருவிழா அம்மன் திருவீதி உலா
ADDED : ஏப் 11, 2024 07:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி, : ஊட்டி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 15ம் தேதி துவங்கி, இம்மாதம் 19ம் தேதி வரை நடக்கிறது.
நாள் தோறும், அம்மனுக்கு அபிஷேக மலர் அலங்கார வழிபாடு நடத்தப்பட்டு, திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் உபயதாரர்களின் அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது.
விழாவின் ஒரு நிகழ்வாக நேற்று நடந்த தேர் திருவிழாவில், அம்மன் கேடய வாகனத்தில் ஸ்ரீ அங்காளம்மன் அலங்காரத்தில், திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

