/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பொதுமக்கள் தாகத்தை தீர்த்த மார்க்கெட் வியாபாரிகள்
/
பொதுமக்கள் தாகத்தை தீர்த்த மார்க்கெட் வியாபாரிகள்
ADDED : மே 01, 2024 10:48 PM

ஊட்டி : ஊட்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் கடை வைத்துள்ள மார்க்கெட் வியாபாரிகள், பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கி வருகின்றனர்.
ஊட்டியில், இதுவரை இல்லாத வகையில் வரலாறு காணாத வெயில் நிலவுகிறது.
கடந்த இரு நாட்களாக, 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது. பெரும்பாலான மக்கள் வெளியே வருவதை தவிர்த்து, வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர்.
வீட்டிற்கு பொருட்கள் வாங்குவது உட்பட, அவசர தேவைக்காக வருபவர்கள்; சுற்றுலா பயணிகள் ஊட்டி நகர பகுதியில் சென்று வருகின்றனர்.
அவர்களின் தாகத்தை தீர்க்க, ரேஸ்கோர்ஸ் பகுதியில் தற்காலிக கடைகளில் வியாபாரம் செய்யும், நகராட்சி மார்க்கெட் வியாபாரிகள் முன் வந்துள்ளனர்.
வியாபாரிகள் சங்கம் சார்பில், கடந்த இரு நாட்களாக, ஏ.டி.சி. கடை நுழைவு வாயிலில், நீர்மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். நீர்மோரை பலரும் குடித்து தாகத்தை தணித்து செல்கின்றனர்.

