/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'மே தின' கோப்பை குதிரை பந்தயம்; ஊட்டியில் சுற்றுலா பயணியர் குஷி
/
'மே தின' கோப்பை குதிரை பந்தயம்; ஊட்டியில் சுற்றுலா பயணியர் குஷி
'மே தின' கோப்பை குதிரை பந்தயம்; ஊட்டியில் சுற்றுலா பயணியர் குஷி
'மே தின' கோப்பை குதிரை பந்தயம்; ஊட்டியில் சுற்றுலா பயணியர் குஷி
ADDED : மே 05, 2024 12:30 AM

ஊட்டி:நீலகிரி மாவட்டம், ஊட்டியில் மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் நடந்த போட்டியில், 'குளோரியஸ் கிங்' என்ற குதிரை இலக்கை எட்டி முதலிடம் பெற்றது.
கோடை விழாவையொட்டி, ஊட்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குதிரை பந்தயம் நடந்து வருகிறது.
பந்தயத்தில் பங்கேற்பதற்காக மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டில்லி, புனே, பெங்களூரூ - சென்னை, மைசூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 500க்கும் மேற்பட்ட குதிரைகள் அழைத்து வரப்பட்டன.
நேற்றைய குதிரை பந்தயம் காலை, 11:00 மணிக்கு துவங்கி மதியம், 2:00 மணி வரை, 6 போட்டிகள் நடந்தன. முக்கிய பந்தயமான 'மே தினம்' கோப்பை பந்தயம் நடந்தது. இதில், 1,400 மீ., இலக்கை நோக்கி, 10 குதிரைகள் ஓடின.
இதில், 'குளோரியஸ் கிங்' என்ற குதிரை, 1:27.93 நிமிடத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற குதிரையின் உரிமையாளர், பயிற்சியாளர் மற்றும் ஜாக்கிக்கு மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் சார்பில் பரிசு வழங்கப்பட்டது. இம்மாதம், 12ம் தேதி, 1.50 கோடி ரூபாய் பரிசுக்கான 'டர்பி' கோப்பைக்கான குதிரை பந்தயம் நடக்கிறது.
குதிரை பந்தயம் போட்டியை ஏராளமான சுற்றுலா பயணியர் கண்டு ரசித்தனர்.