/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அறநிலையத் துறை அதிகாரியுடன் சந்திப்பு
/
அறநிலையத் துறை அதிகாரியுடன் சந்திப்பு
ADDED : ஜூன் 24, 2024 12:26 AM
அன்னுார்;இந்து சமய அறநிலையத்துறை அதிகாரியுடன் அறங்காவலர் குழுவினர் சந்தித்தனர்.
அன்னுார் மன்னீஸ்வரர் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில் அறங்காவலர்கள் பதவி காலம் முடிந்து, 10 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மார்ச் மாதம் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து பொறுப்பேற்ற அறங்காவலர் குழு கோவிலில் பல்வேறு பணிகளை செய்து வருகின்றது.
இந்நிலையில் கோவிலில் செய்ய வேண்டிய திருப்பணிகள் குறித்து ஆலோசிக்க, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷை, அறங்காவலர் குழு நேற்று சந்தித்தது. அறங்காவலர் குழுத் தலைவர் நடராஜன், அறங்காவலர்கள் மணி, சங்கர், முன்னாள் பேரூராட்சி தலைவர் சவுந்தரராஜன் ஆகியோர் கோவிலில் என்னென்ன பணிகள் செய்யப்பட வேண்டும். அதற்கான நடைமுறைகள் என்ன என்பது குறித்தும் உதவி ஆணையருடன் கலந்து ஆலோசித்தனர்.