/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மேட்டுப்பாளையம் ---ஊட்டிக்கு வரும் 28 முதல் சிறப்பு ரயில்
/
மேட்டுப்பாளையம் ---ஊட்டிக்கு வரும் 28 முதல் சிறப்பு ரயில்
மேட்டுப்பாளையம் ---ஊட்டிக்கு வரும் 28 முதல் சிறப்பு ரயில்
மேட்டுப்பாளையம் ---ஊட்டிக்கு வரும் 28 முதல் சிறப்பு ரயில்
ADDED : மார் 06, 2025 07:05 AM
குன்னுார்; ஊட்டி கோடை சீசனுக்காக, விடுமுறை சிறப்பு ரயில்கள், வரும் 28 முதல் ஜூலை, 7ம் தேதி வரை இயக்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டம், குன்னுார்- - ஊட்டி இடையே தினமும், தலா நான்கு முறையும், மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே தலா ஒரு முறையும் இயக்கப்படும் மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில், கோடை விடுமுறைக்காக, வரும், 28 முதல் ஜூலை 7ம் தேதி வரை, வார இறுதி நாட்களில், சிறப்பு ரயில்கள் இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதன்படி, மேட்டுப்பாளையத்தில் இருந்து, 28ல் இருந்து ஜூலை, 6ம் தேதி வரை வெள்ளி, ஞாயிறு கிழமைகளில், காலை 9:10 மணிக்கு புறப்படும் சிறப்பு மலை ரயில், ஊட்டிக்கு பிற்பகல், 2:25 மணிக்கு வரும்.
மேலும், 29ல் இருந்து, ஜூலை 7ம் தேதி வரை, சனி, திங்கள் கிழமைகளில், ஊட்டியில் இருந்து காலை, 11:25 மணிக்கு ரயில் புறப்பட்டு, மாலை, 4:20 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடைகிறது.
இந்த ரயிலில் மேட்டுப்பாளையம் முதல் குன்னுார் வரை, முதல் வகுப்பு, 40 இருக்கைகளும், இரண்டாம் வகுப்பு, 140 இருக்கைகளும் உள்ளன.
குன்னுாரில் இருந்து ஊட்டி வரை கூடுதல் ஒரு பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளது.
ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ' சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து, கோடை சீசனை ரயில் பயணத்துடன் கொண்டாட வேண்டும்,' என்றனர்.