/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மேட்டுப்பாளையம்--கோவை இடையே இருவழி ரயில் பாதை இணை அமைச்சர் முருகன் மனு

ADDED : ஜூலை 05, 2024 01:56 AM

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம்-கோவை இடையே, இருவழி ரயில் பாதை அமைக்க கோரி, மத்திய இணை அமைச்சர் முருகன், கோரிக்கை மனு வழங்கினார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை தரம் உயர்த்தவும், மேட்டுப்பாளையத்தில் இருந்து மேலும் அதிகமான ரயில்களை இயக்கவும், இருவழி ரயில் பாதை அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த லோக்சபா தேர்தலின் போது, நீலகிரி தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட மத்திய இணை அமைச்சர் முருகன், மேட்டுப்பாளையம்-கோவை இடையே இரு வழி ரயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தார். தற்போது மத்தியில் பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. அப்போது மத்திய இணை அமைச்சராக இருந்த முருகன், மீண்டும் இணை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். அதேபோன்று ரயில்வே அமைச்சராக இருந்த அஸ்வின் வைஷ்ணவ், மீண்டும் ரயில்வே அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் மத்திய இணை அமைச்சர் முருகன் டில்லியில் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவை சந்தித்து மேட்டுப்பாளையம் - கோவை இடையே, இருவழி ரயில் பாதை அமைக்க கோரி, மனு கொடுத்தார்.