/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரக்காடு பகுதியில் நடமாடும் ரேஷன் கடை துவக்கம்
/
அரக்காடு பகுதியில் நடமாடும் ரேஷன் கடை துவக்கம்
ADDED : பிப் 23, 2025 11:42 PM
குன்னுார்; குன்னுார் அருகே அரக்காடு பகுதியில், புதிய நடமாடும் ரேஷன் கடை, உபதலை பழத்தோட்டத்தில் புதிய பகுதி நேர ரேஷன் கடை துவக்க விழா நடந்தது.
நீலகிரி எம்.பி., ராஜா, அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், திறந்து வைத்து, கார்டுதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.
எம்.பி., ராஜா பேசுகையில்,'' மாநில முதல்வரால், ஒவ்வொரு தொகுதியிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்களின் கோரிக்கையை ஏற்று, கூட்டுறவுத்துறை சார்பில் இந்த கடைகள் திறக்கப்பட்டு, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
உபதலையில் உள்ள ரேஷன் கடையில், 304 குடும்ப அட்டைகள் பிரித்து, பழத்தோட்டம் பகுதியில் மாதத்திற்கு இரண்டு முறையும்; ஜெகதளாவில், 92 குடும்ப அட்டைகளை பிரித்து, அரக்காடு பகுதியில் நடமாடும் ரேஷன் கடையும் செயல்படுகிறது. இது மாதத்தின் முதல் மற்றும் கடைசி சனிக்கிழமைகளில் செயல்படும்,'' என்றார்.
கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) கவுசிக், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன், பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளர் கமல்சேட், கூட்டுறவு சார்பதிவாளர்கள் கவுரிசங்கர், மேனகா, ஜாக்லீன், குன்னுார் தாசில்தார் ஜவஹர், ஊட்டி நகராட்சி துணை தலைவர் ரவிக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

