/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவை; விவசாயிகள் பயன்படுத்த அறிவுரை
/
நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவை; விவசாயிகள் பயன்படுத்த அறிவுரை
நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவை; விவசாயிகள் பயன்படுத்த அறிவுரை
நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவை; விவசாயிகள் பயன்படுத்த அறிவுரை
ADDED : செப் 04, 2024 10:55 PM
ஊட்டி : 'வாரத்திற்கு ஆறு நாட்கள் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவையை வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது,' என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை: நீலகிரி மாவட்டத்திற்கு ஒரு நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வூர்தியினை அனைத்து கால்நடை வளர்போர் மற்றும் விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு மருத்துவசிகிச்சை அளித்து பயன் பெற வேண்டும். மேலும், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும், கிராம மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதிலும் கால்நடைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அவைகளுக்கு மேம்பட்ட தரமான மருத்துவ கிகிச்சை அளிக்கவும், இரண்டாம் வெண்மை புரட்சியை ஏற்படுத்திடவும் மாநில அரசு பல்வேறு திட்டங்களை உரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. நடமாடும் மருத்துவ சேவை காலை, 8:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை தினசரி இரண்டு கிராமங்களுக்கு வழங்கப்படும்.
கால்நடை மருத்துவ சேவை வழங்க இயலாத தொலை துார குக்கிராமங்களுக்கு சென்று, 'சிகிச்சை, குடற்புழு நீக்கம், செயற்கை முறை கருவூட்டல் பரிசோதனை, தடுப்பூசி பணிகள்,' என, கால்நடை பராமரிப்புத்துறை சார்ந்த பணிகளை வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
அதில், 'வாரத்திற்கு ஊட்டி வட்டாரத்திற்கு இரண்டு நாட்கள்; கூடலுார்வட்டாரத்திற்கு இரண்டு நாட்கள்; குன்னுார் மற்றும் கோத்தகிரி வட்டாரங்களுக்கு தலா ஒரு நாள்,' என, வாரத்திற்கு ஆறு நாட்கள் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்த்தி சேவையை வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சேவையினை, விவசாயிகள் கால்நடை வளர்ப்போர் பெரிய வாய்ப்பாக கருதி கட்டணமில்லாத தொலைபேசி சேவையை பயன்படுத்தி கால்நடைகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை மற்றும் இதர சேவைகளை பெற்று பயனடைய வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.