/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சமையல் பணியில் தாயார் 10ம் வகுப்பு தேர்வில் சாதித்த மகள்
/
சமையல் பணியில் தாயார் 10ம் வகுப்பு தேர்வில் சாதித்த மகள்
சமையல் பணியில் தாயார் 10ம் வகுப்பு தேர்வில் சாதித்த மகள்
சமையல் பணியில் தாயார் 10ம் வகுப்பு தேர்வில் சாதித்த மகள்
ADDED : மே 10, 2024 11:47 PM

குன்னுார்:குன்னுாரில் சமையலரின் மகள், 10 வகுப்பு தேர்வில் சாதனை புரிந்தார்.
குன்னுார் ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு மாணவி வைஷ்ணவி. இவர், 10 வகுப்பு தேர்வில், 460 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார்.
ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவருக்கு தந்தை இல்லாத நிலையில் தாயார் வெண்ணிலா பல்வேறு வீடுகளில் சென்று சமையல் வேலை செய்து மகளை படிக்க வைத்தார்.
வைஷ்ணவி கூறுகையில்,''எனது தாயார் வீட்டு வேலை செய்து மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்து என்னை ஊக்கப்படுத்தினார். மேலும் கடவுளின் அருளாலும். பள்ளி ஆசிரியர்கள் படிப்புக்கு அதிக அளவில் ஊக்கம் கொடுத்து படிக்க வைத்ததாலும் மதிப்பெண் கிடைத்தது. பயோ மேக்ஸ் பாடப்பிரிவில் சேர்ந்து டாக்டர் ஆவது எனது விருப்பம்,'' என்றார்.