/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலை ரயிலை வழிமறித்த காட்டெருமைகளால் தாமதம்
/
மலை ரயிலை வழிமறித்த காட்டெருமைகளால் தாமதம்
ADDED : செப் 13, 2024 10:22 PM

குன்னுார் : மேட்டுப்பாளையத்தில் இருந்து, ஊட்டி நோக்கி வந்த மலை ரயிலை காட்டெருமைகள் வழிமறித்ததால் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது.
குன்னுார்- மேட்டுப்பாளையம் இடையே அடர்ந்த வனப்பகுதி உள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து, ஊட்டிக்கு தினமும் காலை, 7:10 மணிக்கு மலை ரயில் புறப்பட்டு காலை, 10:00 மணிக்கு குன்னுார் வருவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று காலை, 200க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்ட மலை ரயில் மரப்பாலம் அருகே, 20வது கி.மீ., பகுதியில் வந்த போது இரு காட்டெருமைகள் தண்டவாளத்தில் நின்றிருந்தன.
ரயிலை நிறுத்தி ஹாரன் சப்தம் எழுப்பி டிரைவர் மற்றும் ஊழியர்கள் காட்டெருமைகளை விரட்டினர். எனினும், தண்டவாளத்தை விட்டு நகர மறுத்த காட்டெருமைகளை விரட்ட, மீண்டும் ஹாரன் சப்தம் எழுப்பியவாறு பின்தொடர்ந்து ரயில் சென்றது. 400 மீ துாரம் வரை தண்டவாளத்தில் சென்ற காட்டெருமைகள் பிறகு வனப்பகுதிக்குள் சென்றன. இதனால், மலை ரயில் குன்னுார் வர பத்து நிமிடம் கால தாமதம் ஏற்பட்டது.