/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முருகன் கோவிலுக்கு முளைப்பாரி ஊர்வலம்
/
முருகன் கோவிலுக்கு முளைப்பாரி ஊர்வலம்
ADDED : மார் 13, 2025 09:09 PM
ஊட்டி; ஊட்டி எல்க்ஹில் முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவை ஒட்டி முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
ஊட்டி எல்க்ஹில் பகுதியில் பழமையான முருகன் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் பிரபலமான மலேசியா முருகன் கோவிலில் உள்ளதை போன்று, 44 அடி உயர முருகன் சிலை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.
கோவிலில், கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கோபுரங்கள் வர்ணம் பூசப்பட்டு பொலிவுப்படுத்தப்பட்டது. கும்பாபிேஷக விழாவை ஒட்டி நேற்று காலை, 10:00 மணிக்கு மாரியம்மன் கோவிலில் இருந்து முளைப்பாரிகளுடன் தீர்த்த குடங்கள் நகர் வலமாக எடுத்து எல்க்ஹில் முருகன் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது.
இன்று, 14ம் தேதி காலை, 10:15 மணிக்கு விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி ஹோமம், மஹா கணபதி ஹோமம், மஹா கணபதி ஹோமம் , நவகிரக யாகங்கள், தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 16ம் தேதி காலை, 10:15 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.