ADDED : ஜூலை 08, 2026 07:41 PM
அ நிறம் | அளவு
பந்தலுார்: நெல்லியாளம் நகராட்சியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருபவர் பிரசாந்த்,29. ஊட்டி காந்தள் பகுதியை சேர்ந்த இவர், பந்தலுார் பஜாரில் வாடகை ரூமில் தனியாக தங்கியுள்ளார்.
நேற்று காலை அவரின் தாய் மொபைல் போனுக்கு பலமுறை தொடர்பு கொண்டும், போன் எடுக்காத நிலையில், நகராட்சிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
நகராட்சி ஊழியர்கள் சென்று பார்த்த போது, தங்கியிருந்த அறைக்குள் துாக்கில் தொங்கியது தெரியவந்தது. இது குறித்து தேவாலா போலீசார் விசாரிக்கின்றனர்.
