/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போதை பொருள் கடத்தியவர் நாடுகாணியில் கைது
/
போதை பொருள் கடத்தியவர் நாடுகாணியில் கைது
ADDED : ஜூலை 08, 2024 07:00 AM

பந்தலுார்: நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே நாடுகாணி சோதனை சாவடியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோழிக்கோடு நோக்கி சென்ற பைக்கை சோதனையிட்டனர்.
பைக்கை ஓட்டி வந்த, கோழிக்கோடு பகுதியை சேர்ந்த நிஜாம்,30, என்பவரிடம், எம்.டி.எம்.ஏ., என்ற, சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள், 30 கிராம் இருந்தது. மேலும், அவர் வைத்திருந்த குடுவை போன்ற பொருளையும் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், மைசூரில் இருந்து, போதைப் பொருள் வாங்கிச் சென்று, கேரளா மாநிலம் கோழிக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிந்தது. போலீசார் நிஜாமை கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'சர்வதேச அளவில் தடை செய்யப்பட்டுள்ள இந்த போதைப் பொருளை, குடுவை போன்ற கண்ணாடி உபகரணத்தின் உள்ளே வைத்து, லேசாக சூடு படுத்தினால், அதிலிருந்து எழும் புகையை சுவாசித்தால் போதை தலைக்கு ஏறும்.
இதற்கு இளைஞர்கள் பலர் அடிமையாக உள்ளனர். நிஜாமிடம் பிடிக்கப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு 1 லட்சம் ரூபாயாகும். விசாரணை நடந்து வருகிறது' என்றனர்.