/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ராணுவ மையத்தில் தேசிய சாகச பயிற்சி முகாம் நிறைவு
/
ராணுவ மையத்தில் தேசிய சாகச பயிற்சி முகாம் நிறைவு
ADDED : ஜூன் 12, 2024 09:40 PM

குன்னுார், - குன்னுார் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் சார்பில் நடந்த தேசிய சாகச பயிற்சி முகாம் நிறைவு பெற்றது.
குன்னுார் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் சார்பில், நாடு முழுவதும் உள்ள குழந்தைகளுக்கான தேசிய சாகச பயிற்சி முகாம் கடந்த, 2ம் தேதி துவங்கி 10 நாட்கள் நடந்தது. அதில், 126 மாணவ மாணவியர் பங்கேற்றனர்.
முகாமில், 'ஏர் ரைபிள்' மற்றும் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல், படகு சவாரி, பைவாக், புதையல் வேட்டை, குழு உருவாக்குதல், தீத்தடுப்பு மலையேற்றம், படகு சவாரி, குதிரை ஏற்றம், கயிறு இழுத்தல், பாறை ஏறுதல்,' உள்ளிட்ட பல்வேறு சாகச நடவடிக்கைகளில் மாணவ, மாணவியர் ஈடுபட்டனர்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது. பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தின் மூலம் வளர்ப்பு பிராணிகள் கையாள்வது; காயம் அடைந்த விலங்குகளை கவனிப்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குன்னுார் லேம்ஸ்ராக், சிம்ஸ் பூங்கா ஊட்டி தாவரவியல் பூங்கா, பைக்காரா ஏரி, தேயிலை தொழிற்சாலை, சாக்லேட் தொழிற்சாலை உள்ளிட்ட சுற்றுலா ஸ்தலங்களுக்கும் அழைத்து செல்லப்பட்டனர்.
இதன் நிறைவு நாள் விழாவில், மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டன்ட் பிரிகேடியர் சுனில் குமார் யாதவ் பங்கேற்று,'சாகச உணர்வு வளர்ப்பதன் நோக்கம் மற்றும் குழந்தைகளை சிறந்த மனிதராகவும் பொறுப்புள்ள குடிமகனாகவும் உருவாகுதல்,' குறித்து பேசி அனைவரையும் ஊக்கப்படுத்தினர்.