தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நடைபாதை ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தால் நவடிக்கை

நடைபாதை ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தால் நவடிக்கை

நடைபாதை ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தால் நவடிக்கை


ADDED : ஜூலை 31, 2026 12:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2026 12:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலுார்: கூடலுார் நெடுஞ்சாலையோரம் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணி நடந்தது.

கூடலுார் நகரில் சாலையோர நடைபாதைகளில், தொடரும் ஆக்கிரமிப்புகளால் மக்கள் நடந்து செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை துறையினர் சமீபத்தில் நடைபாதையில் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அறிவுறுத்தினர்.

அதன் அடிப்படையில், தேசிய நெடுஞ்சாலை துறையினர், கூடலுார் நகராட்சி ஊழியர்கள், போலீசார் பாதுகாப்புடன் நடைபாதையில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

நெடுஞ்சாலை துறையினர் கூறுகையில்,‘தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள நடைபாதையை தொடர்ந்து ஆய்வு செய்யப்படும். ஆய்வின் போது, நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்படும் கடைகள் அகற்றப்படும்,’என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us