/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எல்லையில் நக்சல் அச்சுறுத்தல் பகுதிகள்
/
எல்லையில் நக்சல் அச்சுறுத்தல் பகுதிகள்
ADDED : ஏப் 02, 2024 10:57 PM

பந்தலுார்;மாவட்ட எல்லையில், நக்சல் அச்சுறுத்தல் உள்ள ஓட்டுச்சாவடி மையத்தை தேர்தல் அதிகாரிகள்; போலீசார் ஆய்வு செய்தனர்.
நீலகிரி மாவட்ட எல்லையில் சேரம்பாடி அருகே கண்ணம் வயல் ஓட்டுச்சாவடி மையம் அமைந்தள்ளது. அதன் அருகே, மாநில எல்லையில் கேரளா வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு நச்சல்கள் நடமாடி வரும் நிலையில், ஒவ்வொரு தேர்தலின் போதும், அதிரடிப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக வயநாடு பகுதியில் முகாமிட்டு வந்த நக்சல்கள், கடந்த வாரம், கர்நாடக வனத்தில் நக்சல் தலைவர் விக்ரம் கவுடா தலைமையில் வந்து சென்றது தெரியவந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, மாவட்ட தேர்தல் அலுவலர் அருணா, எஸ்.பி. சுந்தரவடிவேல், கூடலுார் ஆர்.டி.ஓ., செந்தில்குமார், தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வருவாய்த்துறையினர், கண்ணாம் வயல் வாக்குச்சாவடி மையத்தில் ஆய்வு செய்தனர்.
அங்கு உள்ள குடிநீர், மின்சாரம், கழிவறை மற்றும் சாய்வு தளம் வசதிகள் குறித்து ஆய்வு செய்ததுடன் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆலோசனை செய்தனர்.
அத்துடன், 'இந்த ஓட்டுச்சாவடி மையத்தில் நுண் பார்வையாளர்களை ஈடுபடுத்த வேண்டும், ஓட்டுப்பதிவினை கண்காணிக்க 'வெப்கேமரா' அமைப்பதுடன், மத்திய பாதுகாப்பு படை வந்து செல்ல வசதிகள் ஏற்படுத்த வேண்டும்,' என, அறிவுறுத்தினர்.

