ADDED : ஏப் 14, 2024 11:51 PM

அ நிறம் | அளவு
கூடலுார்;தமிழகம் முழுவதும் தீயணைப்பு துறை சார்பில், ஆண்டுதோறும் ஏப்., 14ம் முதல் 20ம் தேதி தீத்தொண்டு நாள் வார விழா நடந்து வருகிறது.
கூடலுார் தீயணைப்பு நிலையத்தில் நடப்பு ஆண்டுக்கான வார விழா நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று, தீயணைப்பு பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, நீத்தார் நினைவு நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
தீயணைப்பு நிலையத்தில் அமைக்கப்பட்ட, நீத்தார் நினைவு நாள் நினைவு துாணுக்கு நிலைய அலுவலர் மார்டீன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, 'ஒரு வாரத்துக்குதீயணைப்பு தொடர்பான விழிப்புணர்வுநிகழ்ச்சி நடைபெறும்' என, தீயணைப்புதுறையினர் தெரிவித்தனர்.
