ADDED : ஆக 04, 2026 05:40 PM
அ நிறம் | அளவு
கோத்தகிரி: கோத்தகிரி நேரு பூங்கா பார்வையாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நேருபூங்கா, சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் சிறந்த பொழுதுபோக்கு இடமாக உள்ளது. ஆட்சி மாற்றம் காரணமாக, நடப்பாண்டு வழக்கம் போல் நடைபெற இருந்த காய்கறி கண்காட்சி நடத்தப்படவில்லை.
நகராட்சி மற்றும் தோட்டக்கலை துறை பராமரிப்பில் உள்ள பூங்காவில் வறட்சி காரணமாக மலர் நாற்றுகள் பட்டுப்போய் காணப்படுகின்றன. சில நாட்கள் பெய்த மழையின் காரணமாக புல்வெளி பசுமையாக மாறி உள்ளது. எனினும், போதிய அளவில் பார்வையாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
