
செய்முறை:
நேந்திரம் பழத்திற்கு நடுவில் இருக்கும் கருப்பு விதையை வெட்டி எடுக்கவும். தொடர்ந்து சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். ஒரு பாத்திரம் நிறைய தண்ணீர் சேர்த்து கொதிக்கும் போது, அதில் பழத்தை போட்டு வேக வைக்கவும்.
ஏழு நிமிடங்கள் வரை வேக வைக்கவும். பின்னர், பழத்தை வடிகட்டி, மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நெய், முந்திரியை சேர்க்கவும். தொடர்ந்து அதை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
திராட்சை சேர்த்து வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.இதனுடன், தண்ணீர் மற்றும் சேர்த்து ஜவ்வரிசி சேர்க்கவும். ஜவ்வரிசி வெந்ததும், வெல்லம் சேர்த்து கொள்ளவும். வெல்லம் கரைந்ததும், பழத்தை சேர்க்கவும். தொடர்ந்து கிளற வேண்டும்.ஏழு நிமிடம் வரை கிளற வேண்டும். இதில், தேங்காய் பால் சேர்த்து, ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவேண்டும்.
சர்க்கரையும் தொடர்ந்து, தேங்காய் பாலின் முதல் பாலை சேர்க்கவும். இதனுடன், ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். கடைசியாக நெய் சேர்த்து கிளறி, இறுக்கினால், நேந்திர பழ பாயாசம் தயார்.