ADDED : மே 22, 2026 06:31 PM
அ நிறம் | அளவு
ஊட்டி: நீலகிரி மாவட்டத்திற்கு, புதிய எஸ்.பி.,யாக பிருந்தா நேற்று பொறுப்பேற்று கொண்டார்.
மாநில அரசு நேற்று முன்தினம், 13 காவல்துறை அதிகாரிகளை மாற்றி உள்ளது. அதன்படி, நீலகிரி மாவட்ட எஸ்.பி.,யாக இருந்த நிஷா, பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, மாவட்ட புதிய எஸ்.பி., யாக, சென்னை சிறப்பு காவல் படை எஸ்.பி., யாக பணியாற்றிய பிருந்தா, நேற்று முறைப்படி பொறுப்பேற்று கொண்டார்.
