ADDED : ஆக 13, 2024 01:57 AM

பந்தலுார்;பந்தலுார் அருகே சாலையை சீரமைக்க காங்., சார்பில் நுாதன போராட்டம் நடந்தது.
பந்தலுார் அருகே தேவாலா பஜாரில் இருந்து வாழ வயல் வழியாக கரியசோலை, தேவாலா டான்டீ மற்றும் நெலாக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் அமைந்துள்ள பாலம் மற்றும் அதனை ஒட்டிய சாலைப்பகுதி சேதமடைந்து குழியாக மாறி உள்ளது.
இதனால், ஆட்டோ, கார் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் சிரமப்பட்டு வருகின்றனர். சாலையை சீரமைக்க தொடர்ந்து வலியுறுத்தியும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ள வில்லை.
நேற்று காங்., கட்சியின் தேவாலா கிளை சார்பில், வார்டு கிளைச் செயலாளர் சவுகத் தலைமையில் சாலையில் உள்ள குழிகளில் வாழை மற்றும் விவசாய பயிர்கள் நடவு செய்யும் போராட்டம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து, சாலையை சீரமைக்காத, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து, தேவாலா பஜாரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில், கவுன்சிலர் சூரியகலா பிரபு, நிர்வாகிகள் ஷாஜி, கோபிநாதன், அனீஸ், ஜெயக்குமார், சந்திரன், அஷ்ரப் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

