/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரி தனித்துவம் வாய்ந்த மாவட்டம் பிரச்னைகள் தீர்க்கப்படும்: புதிய எஸ்.பி., உறுதி
/
நீலகிரி தனித்துவம் வாய்ந்த மாவட்டம் பிரச்னைகள் தீர்க்கப்படும்: புதிய எஸ்.பி., உறுதி
நீலகிரி தனித்துவம் வாய்ந்த மாவட்டம் பிரச்னைகள் தீர்க்கப்படும்: புதிய எஸ்.பி., உறுதி
நீலகிரி தனித்துவம் வாய்ந்த மாவட்டம் பிரச்னைகள் தீர்க்கப்படும்: புதிய எஸ்.பி., உறுதி
ADDED : ஆக 14, 2024 08:51 PM
ஊட்டி : ''தனித்துவம் வாய்ந்த மாவட்டமான, நீலகிரியின் பிரச்னைகளை அறிந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, எஸ்.பி.,நிஷா கூறினார்.
நீலகிரி மாவட்ட எஸ்.பி.,யாக இருந்த சுந்தரவடிவேல் சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக மாற்றப்பட்டார். நீலகிரிக்கு புதிய எஸ்.பி.,யாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக இருந்த நிஷா நேற்று பொறுப்பேற்று கொண்டார்.
அவர், நிருபர்களிடம் கூறுகையில், 'தமிழகத்தின் பிற மாவட்டங்களை போல் அல்லாமல் நீலகிரி தனித்துவம் வாய்ந்த மாவட்டமாக உள்ளது. இங்கு குறிப்பிட்ட சில பிரச்னைகள் உள்ளன. குறிப்பாக போக்குவரத்து நெரிசல், போக்குவரத்து நெரிசலினால் ஏற்படும் விபத்துகள் குறித்து ஆராய்ந்து அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மனித-விலங்கு மோதலால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதால் இதற்கு வனத்துறை, வருவாய் துறையுடன் போலீசார் இணைந்து தீர்வு காணும் விதமாக பணியாற்றப்படும். இந்த மாவட்டம் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய, 3 மாநிலங்கள் இணையும் எல்லை பகுதியில் அமைந்துள்ளது.
போலீசார் மற்ற மாநில காவல்துறையினருடன் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும். அதேபோல், நீலகிரி மாவட்ட போலீசார் தினசரி பணியில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அவற்றை சரி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தனித்துவமான மாவட்டமாக, நீலகிரி இருப்பதால் இங்குள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து அறிந்து அவற்றை தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்படும்,' என்றார்.