/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'பீக் ஹவர்ஸ்' நேரத்தில் கோவைக்கு பஸ் இல்லை; ஊட்டியில் இருந்து நின்று கொண்டே பலர் பயணம்
/
'பீக் ஹவர்ஸ்' நேரத்தில் கோவைக்கு பஸ் இல்லை; ஊட்டியில் இருந்து நின்று கொண்டே பலர் பயணம்
'பீக் ஹவர்ஸ்' நேரத்தில் கோவைக்கு பஸ் இல்லை; ஊட்டியில் இருந்து நின்று கொண்டே பலர் பயணம்
'பீக் ஹவர்ஸ்' நேரத்தில் கோவைக்கு பஸ் இல்லை; ஊட்டியில் இருந்து நின்று கொண்டே பலர் பயணம்
ADDED : ஜூன் 26, 2024 09:16 PM
குன்னுார் : குன்னுாரில் இருந்து சமவெளி பகுதிகளுக்கு 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில் அரசு பஸ்கள் இயக்காததால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
குன்னுார் 'லெவல் கிராசிங்' பகுதியில், மேட்டுப்பாளையம் கோவை உள்ளிட்ட சமவெளி பகுதிகளுக்கு, கூடலுார், ஊட்டியில் இருந்து வரும் அரசு பஸ்கள் நிறுத்தி, குன்னுார் பயணிகளை ஏற்றி செல்கின்றனர்.
அதே நேரத்தில், கோவை உள்ளிட்ட சமவெளி பகுதிகளுக்கு, குன்னுாரில் இருந்து எந்த பஸ்களும் இயக்கப்படுவதில்லை. மேட்டுப்பாளையத்திற்கு குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டும் இயக்கப்படுகிறது.
இதனால், மணி கணக்கில் காத்திருக்கும் பயணிகள் ஊட்டியில் இருந்து வரும் பஸ்களில் ஏறி செல்கின்றனர்.
குறிப்பாக, சனி, ஞாயிறு போன்ற விடுமுறை தினங்களில் சமவெளி பகுதிகளுக்கு செல்லும் குன்னுார் பயணிகள் பஸ்சில் நின்று கொண்டே பயணிக்கின்றனர்.
வளைவுகள் அதிகம் கொண்ட மலைப்பாதையில் கூட்ட நெரிசலில் பயணம் செய்வது பயணிகளுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தி விடுகிறது.
குன்னுார் பயணிகள் கூறுகையில்,'ஞாயிற்று கிழமைகளில் மாலை, 3:00 மணியில் இருந்து 6:00 வரை 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில் குன்னுாரில் உள்ள கல்லுாரி மாணவ மாணவிகள், பணிக்கு செல்வோர் மணிக்கணக்கில் இந்த பஸ் ஸ்டாப்பில் காத்து நிற்கின்றனர்.
இந்த நேரங்களில், குன்னுாரில் இருந்து தனியாக கோவை உட்பட சமவெளி பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கினால், 'எக்ஸ்பிரஸ்' கட்டணம் வசூலிக்க முடியாது என்பதால் நிராகரிக்கப்படுகிறது.
எனவே, கூட்டம் அதிகம் உள்ள நாட்களில், குன்னுாரில் இருந்து கோவைக்கு அரசு பஸ்கள் இயக்குவதுடன், மேட்டுப்பாளையத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் வரிசையாக, 3 அரசு பஸ்கள் இயக்குவதை தடுத்து, பழங்குடியின மக்கள் உட்பட அனைத்து பயணிகளும் பயன் பெறும் வகையில் காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்க வேண்டும்,' என்றனர்.