/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் எந்த வளர்ச்சியும் இல்லை மாற்றம் வர முருகனுக்கு ஆதரவு தாருங்கள்: கலா மாஸ்டர்

ADDED : ஏப் 12, 2024 01:16 AM

ஊட்டி;நீலகிரி தொகுதி பா.ஜ., வேட்பாளர் முருகனுக்கு ஆதரவாக, ஊட்டியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட திரைப்பட நடன இயக்குனர் கலா மாஸ்டர் பேசியதாவது:
ஊட்டி, 1986ல் பார்த்தது போல் அப்படியே எந்த வளர்ச்சியும் இல்லாமல் உள்ளது. இங்கு போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் முருகன் பற்றி சொல்ல வேண்டும் என்றால், மிகவும் எளிமையானவர், கஷ்டப்பட்டு வந்தவர். மக்களுக்காக சேவை செய்யும் நோக்கில் வந்தவர்.
ஒரு காலத்தில் ஊட்டியில் பல்வேறு இடங்களில் ஏராளமான சினிமா சூட்டிங் நடந்தது. இப்போ அது இல்லை. காரணம் வளர்ச்சி இல்லை. இங்கு நிலவும் போக்குவரத்து நெரிசலால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். சுற்றுலா வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், பா.ஜ., வேட்பாளர் முருகனால் தான் முடியும்.
அவரை ஆதரித்து வெற்றி பெற செய்தால், 'போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு; சுற்றுலா மேம்படுவதற்கான சிறப்பு திட்டங்கள்; ஐ.டி., பார்க்,' என, எண்ணற்ற திட்டங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளார்.
மக்களின் அன்பை பார்த்து தான் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்திற்கு வருகிறார். பிரதமரின் எண்ணற்ற திட்டங்களால் மக்கள் பயனடைந்துள்ளனர். மீண்டும் மோடி வர வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர்.
அவர் மூன்றாவது முறையாக 'ஹாட்ரிக்' அடிப்பது உறுதியாகி விட்டது.இதற்கு ஆதரவு கரம் நீட்டும் வகையில், நீலகிரி தொகுதி பா.ஜ., வேட்பாளர் முருகனை பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு, கலா மாஸ்டர் பேசினார்.