/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வேட்புமனு தாக்கல் செய்ய யாரும் வரவில்லை
/
வேட்புமனு தாக்கல் செய்ய யாரும் வரவில்லை
ADDED : மார் 21, 2024 10:43 AM
ஊட்டி;நீலகிரி லோக்சபா தொகுதிக்கு நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் துவங்கிய நிலையில் ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
நீலகிரி லோக்சபா தொகுதி ஊட்டி, குன்னுார், கூடலுார், மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர் ஆகிய சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது. நீலகிரி லோக்சபா தொகுதியில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அரசு விடுமுறை இல்லாத நாட்களில் காலை, 11:00 மணி முதல் மாலை, 3:00 மணிக்குள் இம்மாதம், 27ம் தேதிக்குள் வேட்புமனு கொடுக்க வேண்டும். வேட்புமனு விண்ணப்பங்களை இந்த அலுவலகங்களில் பெற்றுகொள்ளலாம்.
இதன்படி, வேட்புமனு பெறுவதற்காக தேர்தல் நடத்தும் அலுவலர், தாசில்தார் உட்பட தேர்தல் பிரிவு அலுவலர்கள் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருந்தனர். இரண்டு நாட்கள் ஆகியும் ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

