/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மனுப்போர் நடத்தியும் தீர்வு இல்லை; மழை காலத்தில் அவதிப்படும் பழங்குடியினர்
/
மனுப்போர் நடத்தியும் தீர்வு இல்லை; மழை காலத்தில் அவதிப்படும் பழங்குடியினர்
மனுப்போர் நடத்தியும் தீர்வு இல்லை; மழை காலத்தில் அவதிப்படும் பழங்குடியினர்
மனுப்போர் நடத்தியும் தீர்வு இல்லை; மழை காலத்தில் அவதிப்படும் பழங்குடியினர்
ADDED : மார் 04, 2025 11:16 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே வெள்ளேரி பகுதியில், ஆற்றின் கரையில் குடியிருக்கும் பழங்குடியின குடியிருப்பிற்கு மாற்று இடம் கேட்டு மனு போர் நடத்தியும் தீர்வு கிடைக்காத நிலை தொடர்கிறது.
பந்தலுார் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வெள்ளேரி அருகே, மண்டாக்குனி பழங்குடியினர் கிராமங்கள் உள்ளன.
இங்கு பணியர் சமுதாய பழங்குடியின மக்கள், 10 வீடுகளில் வாழ்ந்து வரும் நிலையில், அதில் ஆற்றின் கரையோரத்தில் உள்ள வீடுகளில் இரண்டு தலைமுறைகளாக இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
மழை காலத்தில் இங்குள்ள இரு வீடுகளை ஆற்று வெள்ளம் மூழ்கடிக்கும் நிலையில், மழை காலம் முடியும் வரை அருகில் உள்ள முகாமில் தங்க வைக்கப்படுகின்றனர். மீண்டும் கோடை காலத்தில் இதே குடியிருப்புகளில் குடியேறும் நிலையில், அடுத்த மழை காலம் துவங்கும் நேரம் இவர்களின் உறக்கம் போய்விடும்.
'குழந்தைகளுடன் குடியிருக்கும் இந்த இரண்டு வீடுகளுக்கும் மாற்று இடம் ஒதுக்கி தரப்படும்,' என, மழை காலத்தில் உறுதியளிக்கும் அதிகாரிகள், மழை காலம் முடிந்ததும் மறந்து விடுகின்றனர்.
'தங்களுக்கு மாற்று இடம் வேண்டும்,' என, வலியறுத்தி கடந்த பல ஆண்டுகளாக, இங்குள்ள மக்கள் அதிகாரிகள் முதல் அரசியல் வாதிகள் வரை மனுக்கள் கொடுத்தும், தீர்வு மட்டும் கிடைக்கவில்லை.
இங்கு வசிக்கும் சசி என்பவர் கூறுகையில், ''மழை காலம் துவங்கினால் குடியிருப்புகள் ஆற்று வெள்ளத்தில் மூழ்கி விடுவதால், குடி இருக்க முடியவில்லை. கோடைகாலம் துவங்கினால் வீட்டிற்குள், பாம்புகளின் தொல்லையால் நிம்மதியாக உறங்க முடியாமல், எப்போது பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சத்துடன் ஒவ்வொரு பொழுதையும் கழித்து வருகிறோம். இங்குள்ள, 10 வீடுகளுக்கும் மாற்று இடம் ஒதுக்கி, வீடு கட்டித்தர வலியுறுத்தி, கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் அதிகாரிகள் ஏனோ கண்டுகொள்ள மறுத்து வருகின்றனர்.
எங்களுக்கும் எங்கள் குழந்தைகள் மற்றும் வயதான பெற்றோருக்கும் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு அரசு நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும். மழை காலம் துவங்கும் முன் மாற்றிடம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.