/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கட்சி வாகனங்களுக்கு சோதனை இல்லை: காய்கறிக்கு சோதனை; வியாபாரிகள் புலம்பல்
/
கட்சி வாகனங்களுக்கு சோதனை இல்லை: காய்கறிக்கு சோதனை; வியாபாரிகள் புலம்பல்
கட்சி வாகனங்களுக்கு சோதனை இல்லை: காய்கறிக்கு சோதனை; வியாபாரிகள் புலம்பல்
கட்சி வாகனங்களுக்கு சோதனை இல்லை: காய்கறிக்கு சோதனை; வியாபாரிகள் புலம்பல்
UPDATED : மார் 22, 2024 12:52 PM
ADDED : மார் 22, 2024 12:52 AM

அன்னூர்;பறக்கும் படை அதிகாரிகள் அரசியல் கட்சி வாகனங்களை சோதனை செய்வதில்லை,' என வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப். 19ம் தேதி நடைபெற உள்ளது. நீலகிரி தொகுதியில் பா.ஜ., சார்பில் மத்திய இணை அமைச்சர் முருகன், தி.மு.க., சார்பில் ராஜா, அ.தி.மு.க., சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வன் போட்டியிடுகின்றனர். நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட அவிநாசி தொகுதியில், எட்டு மணி நேரத்திற்கு ஒரு பறக்கும் படைஅமைக்கப்பட்டுள்ளது. காலை 6:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை ஒரு குழுவும், மதியம் 2:00 முதல் இரவு 10:00 மணி வரை ஒரு குழுவும், இரவு 10:00 முதல் மறுநாள் அதிகாலை 6:00 மணி வரை ஒரு குழுவும் செயல்படுகின்றன.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது :
மேட்டுப்பாளையம், கோவை மற்றும் புளியம்பட்டியில் மொத்த சந்தை உள்ளது. அங்கு காய்கறி, தானியம் உள்ளிட்ட பொருட்கள் வாங்க சென்று வருகிறோம். ஆனால் இதற்கான தொகைக்கு ஆவணம் கேட்கின்றனர். பெரும்பாலும் ரொக்கமாக வாங்கி ரொக்கமாகவே விற்பதால் வங்கி ஆவணம் இருக்காது.
அதேபோல் புளியம்பட்டியில் புதன் மற்றும் வியாழக்கிழமை நடைபெறும் மாட்டு சந்தையில் கொள்முதல் செய்ய வரும் வியாபாரிகளிடம் சோதனை நடத்துகின்றனர். இதனால் காய்கறி, தானியம் மற்றும் கால்நடை வியாபாரம் பாதிப்புக்கு உள்ளாகிறது. 50 ஆயிரம் ரூபாய் என்னும் கட்டுப்பாட்டை ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும். காய்கறி வாகனங்களை பரிசோதிக்கும் பறக்கும் படை அதிகாரிகள் அரசியல் கட்சி கொடி கட்டிய கார், ஜீப், வேன் ஆகியவற்றை பரிசோதிப்பதில்லை. அரசியல் கட்சி பிரமுகர்களை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இவ்வாறு வியாபாரிகள் புகார் தெரிவித்தனர்.

