/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
செயல்படாத ஏ.டி.எம்.,கள்: வாடிக்கையாளர்கள் பாதிப்பு
/
செயல்படாத ஏ.டி.எம்.,கள்: வாடிக்கையாளர்கள் பாதிப்பு
செயல்படாத ஏ.டி.எம்.,கள்: வாடிக்கையாளர்கள் பாதிப்பு
செயல்படாத ஏ.டி.எம்.,கள்: வாடிக்கையாளர்கள் பாதிப்பு
ADDED : மார் 07, 2025 08:31 PM
குன்னுார்:
குன்னுாரில் பல ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.,கள், பயனில்லாமல் இருப்பதால், வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
குன்னுார், சிம்ஸ் பூங்கா, பெட்போர்டு, மவுண்ட் ரோடு, ஒய்.எம்.சி.ஏ., உள்ளிட்ட பகுதிகளில் ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம்.,கள் உள்ளன. இதை பெரும்பாலும் 'அவுட் ஆப் சர்வீஸ்' ஆக உள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு பணம் எடுக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
வாடிக்கையாளர்கள் கூறுகையில், 'சிம்ஸ் பூங்கா எதிர்ப்புறம் உள்ள ஏ.டி.எம்., கடந்த ஓராண்டிற்கும் மேலாக செயல்படாமல் உள்ளதால், வாடிக்கையாளர்களுக்கும் இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும் பயனில்லாமல் உள்ளது.
இது தொடர்பாக, வங்கியில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் மவுண்ட் ரோடு ஒய்.எம்.சி.ஏ., அருகே உள்ள ஏ.டி.எம்., கடந்த ஒரு வார காலமாக 'அவுட் ஆப் சர்வீஸ்' என, போர்டு வைக்கப்பட்டுள்ளது.
தற்போது, பெட்போர்டு அருகே உள்ள ஏ.டி.எம்., அடிக்கடி பூட்டப்படுகிறது. மாற்று வங்கி ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்கும் போது சர்வீஸ் கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதனால், அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் மாற்று வங்கி கணக்குகளுக்கு மாற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. விரைவில் கோடை சீசன் துவங்க உள்ள நிலையில் குன்னுாருக்கு திரளான சுற்றுலா பயணிகள் வரவுள்ளனர்.
எனவே, உடனடியாக இங்கு உள்ள அனைத்து ஏ.டி.எம்.,களையும் செயல்படும் வகையில் வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.