/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கியூ.ஆர்., கோடு வாயிலாகவும் இனி ரயில் டிக்கெட் எடுக்கலாம்!
/
கியூ.ஆர்., கோடு வாயிலாகவும் இனி ரயில் டிக்கெட் எடுக்கலாம்!
கியூ.ஆர்., கோடு வாயிலாகவும் இனி ரயில் டிக்கெட் எடுக்கலாம்!
கியூ.ஆர்., கோடு வாயிலாகவும் இனி ரயில் டிக்கெட் எடுக்கலாம்!
ADDED : செப் 04, 2024 01:56 AM

பாலக்காடு;ரிசர்வேஷன் அல்லாத ரயில் டிக்கெட்டுகள், இனி கியூ.ஆர்., கோடு ஸ்கேன் செய்து பெறும் வசதி, பாலக்காடு கோட்டத்தின் கீழ் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ரயிலில் பயணிக்க, பணம் செலுத்தி டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமில்லை. கியூ.ஆர்., கோடு ஸ்கேன் செய்து கட்டணம் செலுத்தி, ரிசர்வேஷன் அல்லாத ரயில் டிக்கெட் எடுப்பதற்கான வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பாலக்காடு கோட்டத்தின் கீழ் உள்ள, 85 ரயில் நிலையங்களிலும் இந்த வசதி உள்ளது. பயணிக்கும் இடத்தை கவுன்டரில் தெரிவித்த பின், பயண கட்டணம் எவ்வளவு என்று அறிந்து கியூ.ஆர்., கோடு ஸ்கேன் வாயிலாக செலுத்தி, ரிசர்வேஷன் அல்லாத டிக்கெட் எடுத்து கொள்ளலாம்.
பொது பெட்டி டிக்கெட், நடைமேடை டிக்கெட் ஆகியவையும் இப்படி எடுக்கலாம். இது தவிர, பாலக்காடு கோட்டத்தில் உள்ள, 25 ரயில் நிலையங்களில், 63 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.