/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அருவங்காட்டில் நுாலக தின கொண்டாட்டம்
/
அருவங்காட்டில் நுாலக தின கொண்டாட்டம்
ADDED : ஆக 13, 2024 01:55 AM

குன்னுார்;அருவங்காடு கிளை நுாலக வாசகர் வட்டம் சார்பில் நுாலகர் தினம் கொண்டாடப்பட்டது.
கிளை நுாலகர் ஜெய்ஸ்ரீ பேசியதாவது:
நம் நாட்டின் நுாலக தந்தை என அழைக்கப்படும் டாக்டர் ரங்கநாதன் பிறந்த தினமான ஆக., 12ம் தேதி நுாலகர் தினமாக கொண்டாடப்படுகிறது.
சென்னை பல்கலை கழக முதல் நுாலகரும், நுாலக அறிவியல் உருவாக காரணமானவருமான இவர், புத்தகங்களை பொருள் வாரியாக அடுக்குவதற்காக 'கோலன்' பகுப்பு முறையை கண்டுபிடித்தார்.
நம் நாடு மட்டுமின்றி பல நாடுகளில் உள்ள நுாலகங்களும் இந்த பகுப்பு முறையை பயன்படுத்துகின்றன.
நாட்டின் முதல் நடமாடும் நுாலகம் மன்னார்குடியில் துவக்கப்பட்டது; இலங்கையில் யாழ் நுாலகத்தை வடிவமைத்தது; நுாலகங்களில் 'ரெப்ரன்ஸ்' பிரிவு; புத்தகங்களை வாசகர்களே தேடி எடுக்கும் 'ஓபன் அக்சஸ் முறை'; வீட்டுக்கு சென்று நுால்கள் தருவது என, பல புதுமைகளை செய்ததால் இவருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. இவ்வாறு அவர் பேசினார். நுாலக தந்தையின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதில்,கார்டைட் தொழிற்சாலை பள்ளி மாணவ, மாணவியர், வாசகர்கள் பங்கேற்றனர். வாசகர் வட்ட பொருளாளர் ஆனந்தன் நன்றி கூறினார்.

