/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள்
/
கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள்
ADDED : ஆக 29, 2024 10:03 PM

பந்தலுார் : பந்தலுார் அருகே தேவாலா, அய்யன்கொல்லி, நெலாக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், 'ஆல் தி சில்ட்ரன்' அமைப்பு சார்பில், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித்குமார் தலைமை வகித்து பேசுகையில், ''ஊட்டச்சத்து நிறைந்த குழந்தைகளை, உருவாக்க வேண்டும் எனும் நோக்கத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு, இதுபோன்ற ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இவற்றை உட்கொள்ளும் தாய்மார்கள் தொடர்ச்சியாக, தானிய வகைகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை உட்கொள்வது அவசியம்,'' என்றார்.
கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ''தொடர்ச்சியாக அனைத்து பகுதிகளிலும், இதுபோன்ற உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கர்ப்பிணிகள், ஆரோக்கியத்துடனும், மன மகிழ்ச்சியுடனும் இருப்பது அவசியம்,''என்றார்
உணவு பெட்டகங்களை வழங்கி டாக்டர் நவீன்குமார் பேசுகையில், ''கர்ப்பிணிகளுக்கு, தொடர்ச்சியாக அறிவுரைகள் கூறி, தரமான, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வைக்கப்படுகிறது. மேலும், சத்து குறைவான தாய்மார்களுக்கு, அதற்குரிய மருந்துகள் வழங்குவதுடன்,ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.
எனவே, தாய்மார்கள் வளமான எதிர்கால சமுதாயத்தை உருவாக்கிட முன்வரவேண்டும். அதற்கு குடும்பத்தினரும் ஒத்துழைக்க வேண்டும்,'' என்றார்.
நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர் அமுதாசெல்வி, செவிலியர்கள், சுகாதார நிலைய பணியாளர்கள் பங்கேற்றனர்.