/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இஸ்லாமியர்களுக்கு பாயாசம் வழங்கல்
/
இஸ்லாமியர்களுக்கு பாயாசம் வழங்கல்
ADDED : செப் 17, 2024 05:23 AM
கூடலுார்: கூடலுார் ஸ்ரீமதுரை பகுதியில் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக, மிலாடி நபி ஊர்வலத்தில் பங்கேற்ற இஸ்லாமியர்களுக்கு, ஸ்ரீமதுரை ஊராட்சி தலைவர், கவுன்சிலர்கள் பாயாசம் வழங்கினர்.
மிலாடி நபியை முன்னிட்டு, குச்சிமூச்சு மொகிமாத்துள் இஸ்லாம் அமைப்பு சார்பில், நேற்று வாகன பேரணி நடந்தது. குச்சிமுச்சி பள்ளிவாசல் அருகே துவங்கிய ஊர்வலத்துக்கு கமிட்டி தலைவர் உமர் தலைமை வகித்தார். செயலாளர் ரசீது முன்னிலை வகித்தார்.
ஊர்வலம் கல்லிக்கரை, கம்மாத்தி வழியாக குங்கூர்மூலா ஊராட்சி அலுவலகம் வந்தது. அங்கு மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக, ஊராட்சி மன்ற தலைவர் சுனில், துணைத் தலைவர் ரெஜிமேத்யூ, கவுன்சிலர்கள் ஸ்ரீஜேஷ், சிக்மாரி, சிரிஜா, பீனா, சில்தா, ஊராட்சி மன்ற செயலாளர் சோனி ஷாஜி ஆகியோர், அனைவருக்கும் பாயாசம் வழங்கினர். ஊர்வலம் மண்வயல் பகுதியில் நிறைவு பெற்றது.