தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள பழைய வாகனங்கள்

போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள பழைய வாகனங்கள்

போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள பழைய வாகனங்கள்


ADDED : ஜூலை 06, 2024 01:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2024 01:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலுார்;கூடலுார் கோழிக்கோடு சாலை ஓரங்களில் இடையூறாக, நிறுத்தப்பட்டுள்ள பழைய வாகனங்களை அகற்ற வேண்டும்.

கூடலுாரில், விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில், கோழிக்கோடு சாலை, செம்பாலா முதல் நந்தட்டி வரை, சாலை ஓரங்களில் இருபுறமும் பயனற்ற பழைய வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். சில இடங்களில், வாகனங்களை சுற்றி முட்புதர்கள் வளர்ந்துள்ளது.

மேலும், அப்பகுதியில் உள்ள தனியார் பணிமனைக்கு வரும், வாகனங்களையும் அவ்வப்போது சாலையில் நிறுத்துகின்றனர். இதனால், அப்பகுதியில் அடிக்கடி வாகன போக்குவரத்துக்கு ஏற்படுகிறது. மக்கள் நடந்து செல்ல, சிரமப்பட்டு வருகின்றனர். இப்பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தியுள்ளனர்.

மக்கள் கூறுகையில், 'பழைய வாகனங்களை அதன் உரிமையாளர்களும், பழுது நீக்க வரும் வாகனங்களை, தனியார் பணிமனை ஊழியர்களும், வாகன போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் இருபுறமும் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால், அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துக்கள் ஆபத்து உள்ளது. அரசு துறையினர் ஒருங்கிணைந்த இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரங்களை நிறுத்தப்பட்ட வாகனங்களை அகற்ற வேண்டும்,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us