/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழைய துணிகளில் தீ பரவி ஒருவர் மரணம்: போலீசார் விசாரணை
/
பழைய துணிகளில் தீ பரவி ஒருவர் மரணம்: போலீசார் விசாரணை
பழைய துணிகளில் தீ பரவி ஒருவர் மரணம்: போலீசார் விசாரணை
பழைய துணிகளில் தீ பரவி ஒருவர் மரணம்: போலீசார் விசாரணை
ADDED : ஜூலை 31, 2024 01:54 AM
கோத்தகிரி;கோத்தகிரி பஸ் நிலையத்தில் பழைய துணிகள் வைக்கும் இடத்தில் உடல் கருகி ஒருவர் இறந்தார்.
கோத்தகிரி பஸ் நிலையத்தில், பழைய துணிகளை வசதி இல்லாதோர் பயன்படுத்தும் வகையில், தனியார் அமைப்பு சார்பில், 'அன்பு மேடை' என்ற இரும்பு பெட்டகம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, இங்கு, பழைய துணிகள் வைக்கப்படுகிறது. ஏராளமானோர் துணிகளை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 10:30 மணியளவில், கோத்தகிரி இடுக்கரை பகுதியை சேர்ந்த சக்தி, 52 என்பவர், துணிகள் வைக்கப்பட்ட பெட்டகத்தை ஒட்டி படுத்துள்ளார்.
அப்போது, அவர் புகைப்பிடிப்பதற்காக பற்றவைத்த தீ, துணிகளில் பரவியுள்ளது. துணிகளுக்கு நடுவில் படுத்திருந்த சக்தி மீது தீ பரவியுள்ளது. இரவு ரோந்து பணியில் இருந்த, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், காவலர் பிரேம் மற்றும் டாக்சி ஓட்டுனர் மோகன் ஆகியோர், அருகில் இருந்த பேக்கரியில் இருந்து, தண்ணீர் எடுத்து வந்து தீயை அணைத்தனர்.
தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன், சக்தியின் உடலில், 50 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. கோத்தகிரி அரசு பணியில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக, மேட்டுப்பாளையம் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.