/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வயநாடு நிலச்சரிவில் மேலும் ஒருவர் பலி
/
வயநாடு நிலச்சரிவில் மேலும் ஒருவர் பலி
ADDED : ஜூலை 31, 2024 11:55 PM
கூடலுார் : கேரள மாநிலம் வயநாடு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:30 மணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில், ஏராளமானவர்கள் உயிரிழந்தனர்.
அதில், கூடலுார் மரப்பாலம் அட்டிகொல்லி பகுதியை சேர்ந்த காளிதாஸ், பந்தலுார் அய்யன் கொல்லி அம்பேத்கர் நகரை சேர்ந்த கல்யாணகுமார் ஆகியோர் உயிரிழந்தனர். அவர்கள் உடல் நேற்று முன்தினம், மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு பின் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், வயநாடு முண்டகை பகுதியில் உள்ள மதரஸா பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்த, பந்தலுார் கையுன்னியை சேர்ந்த சியாபுதீன்,32, என்பவர் நிலச்சரிவில் சிக்கி பலியானார். அவர் உடல் பந்தலுார் கொண்டு வரப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.