ADDED : மார் 09, 2025 10:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்; மசினகுடி மாயார் அருகே, லாரியின் பின் பகுதி மோதி, தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
முதுமலை மசினகுடியை சேர்ந்தவர் சித்தன்,65. இவர் உட்பட சிலர் நேற்று முன்தினம், மதியம் மாயாறு பூதநத்தம், பகுதியில் சாண உரத்தை லாரியில் ஏற்றினர். உரம் ஏற்றிய பின், டிரைவர் லாரியை பின்னோக்கி இயக்கி உள்ளார்.
அப்போது, பின்னால், நின்றிருந்த சித்தன் மீது எதிர்பாராத விதமாக லாரி மோதியுள்ளது.
அதில், படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்தார். விபத்து குறித்து மசினகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.