/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொடர்ந்து பணி நெருக்கடி; அரசு பஸ் டிரைவர் தற்கொலை முயற்சி
/
தொடர்ந்து பணி நெருக்கடி; அரசு பஸ் டிரைவர் தற்கொலை முயற்சி
தொடர்ந்து பணி நெருக்கடி; அரசு பஸ் டிரைவர் தற்கொலை முயற்சி
தொடர்ந்து பணி நெருக்கடி; அரசு பஸ் டிரைவர் தற்கொலை முயற்சி
ADDED : ஜூலை 01, 2024 02:27 AM
சூலூர்;தொடர்ந்து பணியாற்ற அதிகாரிகள் நெருக்கடி கொடுத்ததால், அரசு போக்குவரத்து கழக டிரைவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் அரசு போக்குவரத்து கழக டிப்போ உள்ளது. இங்கு பால்ராஜ்,45, என்பவர் டிரைவராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு பணி முடித்து வீட்டுக்கு செல்ல இருந்தார். அப்போது, டிப்போ அதிகாரிகள், வீட்டுக்கு செல்ல கூடாது, தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என, நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான பால்ராஜ், டிப்போ முன்புறம் நின்று கொண்டு உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். சக ஊழியர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். பிரச்னையை மூடி மறைக்க, அதிகாரிகள் அந்த டிரைவருடன் சமாதானம் பேசினர். இதுகுறித்து போக்குவரத்து கழக டிரைவர்கள் மற்றும் நடத்துனர்கள் கூறுகையில், ''கடந்தாண்டு இதே டிப்போவில் ஒரு ஓட்டுனர் பணி நெருக்கடி காரணமாக தற்கொலைக்கு முயன்றார். தற்போது மீண்டும் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஓய்வு கொடுக்காமல் வேலை வாங்கும் நிர்வாகத்தின் செயலால் நாங்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளோம். நெருக்கடி தரும் அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.