/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி மலை ரயில் 15ம் தேதி வரை ரத்து
/
ஊட்டி மலை ரயில் 15ம் தேதி வரை ரத்து
ADDED : ஆக 07, 2024 12:27 AM
குன்னுார்:மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரயில், 15ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையால், குன்னுார் மலை ரயில் பாதையில் ஆடர்லி அருகே, 14.8வது கி.மீ. பகுதியில் கடந்த, 1ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. சீரமைப்பு பணிகள் நடந்து வந்த நிலையில், 6ம் தேதி வரை ரயில் ரத்து செய்யப்பட்டது. சீரமைப்பு பணிகள் முழுமை பெறவில்லை.
இந்நிலையில், தென்னக ரயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் கூறுகையில்,'மழை தொடர்வதால், ரயில் பாதையின் சில பகுதிகளில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், வரும், 15ம் தேதி வரை மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்படுகிறது. அதே நேரத்தில், ஊட்டி-குன்னுார் ரயில் தொடர்ந்து இயக்கப்படும்,' என்றனர்.