ADDED : மே 21, 2024 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்;நீலகிரியில் தொடரும் மழையின் காரணமாக, ஊட்டி- மேட்டுப்பாளையம் மலை ரயில் இன்றும் (21ம் தேதி) ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில், 20ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், 'கனமழை நீடிப்பதால் முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக, 21ம் தேதியும் (இன்று) மலை ரயில் ரத்து செய்யப்படுகிறது.
முன் பதிவு செய்த பயணிகளின் கட்டணம் திருப்பி வழங்கப்படும்,' என, சேலம் கோட்ட அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதே நேரத்தில், ஊட்டி-குன்னுார் இடையே இயக்கப்படும் மலை ரயில் நேரம் மாற்றப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.

